மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்
மதுரை உசிலம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோடு சீனிவாசன் தெருவில் வசிக்கும் ஜெயராமனின் மகன் தினேஷ் குமார்( 22) என்பவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் (பிப் .10) மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் விஜயா உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன வாலிபரை தேடி வருகின்றனர்.