தனியார் பள்ளி மைதானத்தில் திடீர் தீ விபத்து

தாராபுரம் தனியார் பள்ளி மைதானத்தில் திடீர் தீ விபத்து;

Update: 2025-02-12 06:38 GMT
தாராபுரம் பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சுமார் இரண்டு ஏக்கர் அளவிற்கு காலியிடம் உள்ளது. இந்த காலி இடத்தில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்து புல்லில் திடீரென தீ பிடித்தது மளமள என பரவிய தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. இது பற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அதிகாரி ராஜ ஜெயசிம்ம ராவ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .

Similar News