ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
முதுகுளத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ வீரப்பெருமாள் சாஸ்தா , ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள இலந்தைக்குளம் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வீரப்பெருமாள் சாஸ்தா, ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பணசாமி ஆலய நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று மங்கள இசை,திருமுறை ஸ்ரீ கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கிராம சங்கல்பம்,பிரவேச பலி, வாஸ்து சாந்தி,யாகசாலை பிரசேனம், பூஜையுடன் தொடங்கப்பட்டது. இரண்டாம் கால யாகசாலை பூஜையாக இன்று விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜை ,லட்சுமி பூஜை, சப்த கன்னி பூஜை, நாடி சந்தானம், திரவிய ஹோமம், மஹாபூர்ணாகுதி ,சதுர்வேதம், யாத்ரதானம்,நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு கோவிலை வந்தடைந்து .ஸ்ரீ வீர பெருமாள் சாஸ்தா, ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, ஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலயத்தில் உள்ள கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் . பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ முருகன்,ஸ்ரீ இளையபெருமாள், கோவிலுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின்பு ஸ்ரீ வீர பெருமாள் சாஸ்தா,ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமி ஸ்ரீ அரியநாச்சி அம்மன், ஆகிய தெய்வங்களுக்கு விபூதி, சந்தனம் ,பன்னீர், இளநீர் ,உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது