குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கொள்முதல் நிலையத்திற்குள் நுழைந்த தண்ணீர்

நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்ததால் விவசாயிகள் கவலை;

Update: 2025-02-12 07:30 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்காவிற்குட்பட்ட வாழக்கரை கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர், கொள்முதல் நிலையத்தில் புகுந்ததால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து கூடுதல் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், பெய்த கனமழை காரணமாக, தரையோடு சாய்ந்த சம்பா பயிர்களை, கூடுதல் செலவு செய்து அறுவடை செய்து சொற்ப மகசூலை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த விவசாயிகள், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் மீண்டும் நனைந்ததால் மீண்டும் சாலையில் கொட்டி காய வைத்து வரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கொள்முதல் நிலையத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதோடு, மீண்டும் தண்ணீர் உட்புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேநிலை நீடித்தால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News