ராமநாதபுரம் விவசாய சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கமுதி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து, சி.டி.ஸ்கேன், எம்ஆர்ஐ. ஸ்கேன் பரிசோதனை கூடங்கள் தொடங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜி. குருசாமி தலைமையில், மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாவட்டத் தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கமுதி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமித்து சி.டி.ஸ்கேன், எம்ஆர்ஐ. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை கூடங்களை தொடங்க வேண்டும். மருத்துவமனையில் நாய் கடி, பாம்பு கடி நோய்களுக்கு ஊசி, மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி}வைகை}குண்டாறு}கிருதுமால் நதி இணைப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். கமுதி குண்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் கமுதி, அபிராமம் பகுதிகளை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். ..