ராமநாதபுரம் வீணா போகும் குடிநீரை குழாயை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
கமுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலாயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வினாகி வருகிறது கண்டு கொள்ளாத நிர்வாகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள 220 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் என குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கமுதி}மதுரை சாலையில் குண்டாறு பாலம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் முறையாக கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல கோட்டைமேடு, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தலையிட்டு குழாய் உடைப்புகளை சீரமைத்து சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.