விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைக் குழுவினர்
ஆடல் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைக்குழுவினர்;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், மாவட்ட வருவாய் துறை ஏற்பாட்டில், கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மற்றும் சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்தான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சேலத்தை சேர்ந்த ரேவதி வெள்ளியங்கிரி ஆகியோரை கொண்ட கலைக்குழுவினர் இந்த நிகழ்வில் ஆடல்,, பாடல் நிகழ்வின் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இந்த நிகழ்வை கண்டு விழிப்புணர்வு பெற்றனர்..இந்த நிகழ்வின் போது பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட உடன் இருந்தனர் ..