நெருங்கும் காதலர் தினம் பரிசு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
உலக காதலர் தினத்தை ஒட்டி பரிசு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது;
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 உலக காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாமக்கல்லில் பரிசுப் பொருள் விற்பனை செய்யும் அங்காடிகளில் காதலர் தினத்தை ஒட்டி ஏராளமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம் புதன் சந்தை சாலையில் செயல்பட்டு வரும் பரிசு பொருள் அங்காடி கடைகளில், காதலர் தினம் சிறப்பு விற்பனை துவங்கியுள்ள நிலையில், இது குறித்து கடையின் உரிமையாளர் சரவணன் என்பவர் கூறும் பொழுது ஒவ்வொரு ஆண்டுமே காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 1ஆம் தேதி முதலே காதலர் தினத்திற்கென்று பரிசுப் பொருள் காதலர்கள் வாங்குவார்கள். அவர்கள் தேவைக்கேற்ப பரிசு பொருட்களை வாங்கி வைத்துள்ளோம். குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான அனைத்து விலையிலும் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.