விழுப்புரத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;
விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலா (வயது 40), நகை தொழிலாளி. இவர், விழுப்புரம் புதுத்தெருவில் உள்ள சக்கரவர்த்தி (36) என்பவரின் கடையில் பணிபுரியும் குணா என்பவரிடம் கேலி,கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சக்கரவர்த்தி என் கடையில் பணிபுரியும் குணாவை எப்படி நீகேலி,கிண்டல் செய்யலாம் எனக்கேட்டு பாலாவை திட்டி தாக்கினார்.இதுகுறித்து பாலா, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர்