தி.மு.க., தொண்டர்களை நம்பி தேர்தலை சந்திக்கிறது: கனிமொழி

விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில் பேச்சு;

Update: 2025-02-13 04:39 GMT
விழுப்புரம் தி.மு.க., மகளிரணி கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழியிடம், பிரசாந்த் கிஷோர் த.வெ.க., தலைவர் விஜயோடு சென்றது பற்றி நிருபர்கள் கேட்டனர். அப்போது, ' தேர்தல் வியூகம் வகுத்து தருவது பிரசாந்த் கிஷோரின் தொழில். அவர் யார் அழைக்கிறார்களோ அங்கு செல்கிறார். அதை பற்றி எங்களுக்கு என்னவுள்ளது.தி.மு.க., தொண்டர்களை நம்பி தேர்தலை சந்திக்கிறது. முதல்வர் எந்த வழியை காட்டுகிறாரோ அந்த வழியில் செயல்பட தி.மு.க., தலைவர்கள், தொண்டர்கள் தயாராக உள்ளனர். இதனால் எங்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என கூறினார்.ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக மாணவர்களிடம் நடந்து கொள்வது பற்றி கேட்டபோது, சட்டங்கள் உள்ளது, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பள்ளிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். முதல்வர் சட்டசபையில் கடும் சட்டங்களை எடுத்து கூறி பேசியுள்ளார்.பள்ளியில் பாலியல் ரீதியான தொந்தரவு செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News