தை மாத பௌர்ணமியை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவிக்கு
மிளகாய் கொண்டு சிறப்பு யாகம்;
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு தை மாத பௌர்ணமியை முன்னிட்டு மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீ நல்லமுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை யாகசாலை குண்டத்தில் நிரப்பி பூரணாஹூதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விஜயா குமரவேல் செய்திருந்தார்.