திருக்கண்ணங்குடி பெருமாள் கோவில் அருகில் புதிய அரசு டாஸ்மாக் மதுபான கடை

வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு;

Update: 2025-02-13 08:09 GMT
நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடி அருகே பிரசித்தி பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றான, தாமோதர நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே, புதிதாக அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைக்க, கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருக்கண்ணங்குடி கிராம மக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், அங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது அரசு டாஸ்மாக் மதுபான கடை தங்களது கிராமத்தில் அமைக்கப்பட்டால், சமூக விரோதிகள் கூடாரமாக அந்த பகுதி அமைந்து விடும். எனவே, மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் கடை அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News