அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் தீர்மானங்கள் இருப்பதாக கூறி

7 திமுக உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணியை கட்டி தர்ணா;

Update: 2025-02-13 13:56 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில், சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர் அதிமுகவை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். தலைஞாயிறு பேரூராட்சியில், 7 அதிமுக உறுப்பினர்களும், 7 திமுக உறுப்பினர்களும்,துணைத் தலைவர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியும் உள்ளனர். கூட்டம் தொடங்கிய போது, மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில் 7 திமுக உறுப்பினர்கள், அரசியல் கால்புணர்ச்சி காரணமாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சுயலாபத்தோடு பொதுமக்கள் நலனுக்கு எதிராகவும், அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் கூட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளதால். திமுக உறுப்பினர்கள் அதனை நிராகரிப்பதாக கூறி, வாயில் கருப்பு துணி கட்டிக் கூட்டத்தை புறக்கணித்ததுடன், கண்டனம் முழக்கங்களையும் எழுப்பினர். தலைவர் உள்ளிட்ட அதிமுக, பிஜேபி உறுப்பினர்கள் 8 பேர் கூட்டத்தை முடித்து கிளம்பி விட்டனர். இதனை கண்டித்து, திமுகவினர் வாயில் கருப்புத் துணியைக் கட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர், பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து சுமார் 3 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோரோடு தொடர்பு கொண்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து கலைந்து சென்றனர். பேரூராட்சி கூட்டத்தின் போது, வாயில் கருப்பு துணி கட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News