கடிநெல்வயல் ஊராட்சியை வேதாரண்யம் நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து

கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்;

Update: 2025-02-13 14:06 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கடிநெல்வயல் ஊராட்சி விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பி வாழ்கின்ற விவசாயிகள் மற்றும் உப்பள தொழிலாளர்கள் வாழுகின்ற பின் தங்கிய கிராமமாகும். இந்த கிராமத்தை நகராட்சியுடன் சேர்த்து விட்டால், கிராம மக்கள் வீட்டு வரி அதிகளவில் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், தங்களுக்கு கிடைத்து வரும் 100 நாள் வேலை பறி போய்விடும் எனவும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் தங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என்றும் கூறி, கடிநெல்வயல் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உண்ணாவிரதத்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், சன் செல்லப்பன், ஜான்முத்து, பங்குதந்தை ஜான் கென்னடி, கடிநெல்வயல் உரிமை மீட்பு குழு ஜோசப், அறிவொளி, செந்தில், ராமலிங்கம், ஞானராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். மாலை வரை உண்ணாவிரதம் இருந்து, பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கலைந்து சென்றனர்.

Similar News