வக்ஃப் மசோதா சட்டத்தை கண்டித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தீயிட்டு எரித்து
எஸ்டிபிஐ சார்பில் போராட்டம்;
மத்திய அரசின், வக்ஃப் திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, நாகை அபிராமி அம்மன் திடலில், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் ஹாஜாஷேக் அலாவுதீன் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசை கண்டித்தும், வக்ஃப் திருத்த மசோதா சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இஸ்லாமியர்களின் மார்க்கத்திற்கு எதிரான, வக்ஃப் திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என முழக்கமிட்ட அவர்கள், திடீரென வக்ஃப் மசோதா சட்டத்தை கண்டித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தீயிட்டு எரித்தும், கிழித்தெறிந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.