வத்திராயிருப்பில் வருவாய் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயுவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.,*
வத்திராயிருப்பில் வருவாய் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயுவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.,*;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் வருவாய் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயுவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்., விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நீர் மேலாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏழு பேரை மாவட்ட நிர்வாகம் பணியை சரியாக கவனிக்கவில்லை என தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் ஏழு பேரை பணியிட நீக்கம் செய்த ஸ்டாலின் அரசின் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு எதிராகவும் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் சரஸ்வதி தலைமையில் அலுவலகப் பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக வருகை தந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி மன உளைச்சலுடன் திரும்பிச் சென்றனர். ஸ்டாலின் ஆட்சியில் அரசுக்கு எதிராகவும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.