சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை பணயிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.

சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை பணயிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.;

Update: 2025-02-13 15:01 GMT
கனிமவள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை பணயிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம். விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்காபுரத்தில் கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஜேசிபி வாகனம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கனிம வள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் ராமநாதனை சஸ்பென்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் புதன் கிழமை உத்தரவிட்டார். மேலும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்,உதவி வேளாண்மை அலுவலர், மேலும்,நீர்வளத்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட 7 பேரை சஸ்பென்ட் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதனையடுத்து இன்று காலை வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட‌ ஆட்சியர் அலுவலகத்தில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்கள் அருப்புக்கோட்டை, சாத்தூர்,ஆகிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டன. அதேபோல் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் பணி இடை நீக்கம் செய்த தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரியும் முத்து குருவிற்கு ஆதரவாக வேளாண்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர் ஒரே நாளில் அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வேளாண்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஈடுபட்டுள்ளதால் அரசு பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்

Similar News