அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் உட்பட ஒட்டுமொத்த வருவாய்த்துறை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்*

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் உட்பட ஒட்டுமொத்த வருவாய்த்துறை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்*;

Update: 2025-02-13 15:07 GMT
கனிமவள கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட நான்கு வருவாய் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை மாவட்ட ஆட்சியர் திரும்ப பெற வலியுறுத்தி அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் உட்பட ஒட்டுமொத்த வருவாய்த்துறை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமம், பெரியகுளம் கண்மாயில் கடந்த 4 ஆம் தேதி விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் அள்ளிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட ஆணையினை முறைகேடாக பயன்படுத்தி தொடர்ந்து கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த 7 லாரிகள் மற்றும் ஒரு ஜே.சி.பி மற்றும் ஹிட்டாச்சி வாகனத்தை வருவாய்த்துறையினர் பிடித்து வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தவறியதாக சாத்தூர் தாசில்தார் உள்ளிட்ட நான்கு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட ஏழு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உட்பட வருவாய்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணிகளை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் துறை அதிகாரிகளின் போராட்டம் காரணமாக ‌வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகம் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News