அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.;

Update: 2025-02-13 15:52 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில்  புத்தகத் திருவிழா நாமக்கல்லில் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வரும்  மோகன்ராஜ், இந்த போட்டியில் பங்கேற்று, முதல் பரிசு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரை கல்லூரி முதல்வர் ரேணுகா உள்ளிட்ட பேராசிரியர்கள், ரகுபதி, சரவணாதேவி, காயத்ரி, ஞானதீபன் உள்பட  மாணவ, மாணவியர் பாராட்டினர்.

Similar News