மாணவிக்கு பாலியல் தொல்லை டாக்டர் கைது
குமாரபாளையம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிசியோதெரபி டாக்டர் கைது செய்யப்பட்டார்.;
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 22 வயது பெண், குமாரபாளையம் தனியார் பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியின் சார்பில் குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு, செய்முறை பயிற்சிக்காக பல மாணவிகளுடன் அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிகிச்சை மற்று பயிற்சியளித்து வரும் கண்ணன், 35, என்பவரிடம் பயிற்சி பெற்று வந்தார். இவரது மருத்துவமனைக்கு டாக்டர் கண்ணன் வர சொல்ல, அங்கு இந்த மாணவிகள் செல்கின்றனர். இந்த மாணவி வசம், டாக்டர் கண்ணன் தகாத முறையில் நடந்ததாக கூறபடுகிறது. இது குறித்து மாணவி, தன பெற்றோர் வசம் கூற, அவர்கள் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்படி, குமாரபாளையம் போலீசார், டாக்டரை கைது செய்தனர்.