சென்ட்ரிங் வேலையில் கம்பி அறுக்கும் போது, மெசின் காலில் தவறி விழுந்தததில் பலத்த அடிபட்டு தொழிலாளி பலி

குமாரபாளையம் அருகே சென்ட்ரிங் வேலையில் கம்பி அறுக்கும் போது, மெசின் காலில் தவறி விழுந்தததில் பலத்த அடிபட்டு தொழிலாளி பலியானார்.;

Update: 2025-02-13 15:58 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல், 65. கட்டுமான செண்டரிங் வேலை. இவர் நேற்றுமுன்தினம் குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், மெசின் மூலம் கம்பிகளை அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது கை தவறி மெசின் வலது கால் தொடை மீது விழுந்ததில், மெசின் காலை அறுத்ததால் ரத்தம் பெருமளவில் வெளியேறியது. இது குறித்து இவரது மனைவிக்கு இரவு 12:00 மணிக்கு தகவல் தர, தகவல் தர, தன் உறவினர்களுடன் நேரில் வந்த மனைவி, சாந்தி, 55, தன் கணவரை, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து, சாந்தி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News