நெஞ்சு வலியால் விசைத்தறி தொழிலாளி பலி
குமாரபாளையத்தில் நெஞ்சு வலியால் விசைத்தறி தொழிலாளி பலியானார்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கம்பன் நகர் பகுதியில் வசிப்பவர் குருசாமி, 47. விசைத்தறி கூலி. இவர் நேற்று அதிகாலை 12:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள விசைத்தறி பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி வந்து, இறந்து விட்டார். இது குறித்து அந்தியூர் அருகே உள்ள இவரது மூத்த சகோதரர் சரவணனுக்கு, பட்டறை உரிமையாளர் தகவல் தர, நேரில் வந்த சரவணன், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது பற்றி வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த குருசாமிக்கு திருமணமாகி, மனைவி ஐந்து ஆண்டுகளில் பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு கவுசல்யா என்ற மகள் மட்டும் உள்ளார்.