ராமநாதபுரம் அரசு பேருந்து விபத்து மூவர் பலி

மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூவர் உடல் நசுங்கி உயிரிழப்பு. இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி;

Update: 2025-02-14 05:02 GMT
ராமநாதபுரம் அருகே மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூவர் உடல் நசுங்கி உயிரிழப்பு. இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. ராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் வந்த பெண் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த நால்வர் இராமநாதபுரத்தில் நடைபெறும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்காக இராமநாதபுரம் நோக்கி காரில் வந்துள்ளனர். கார் இராமநாதபுரம் அடுத்த சேதுபதி கலைக் கல்லூரி அருகே உள்ள புத்தேந்தல் விலக்கு பகுதியில் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டு தூக்கத்தில் எதிரே இராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஏசி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் வந்த மற்றொருவர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு பேருந்தில் பயணித்த பெண் ஒருவருக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து இராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் பயணித்த நால்வரில் குத்தாலிங்கம் என்பவர் இராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கான ஒப்பந்ததாரராக இருந்து வருவதாகவும் இவர் வேலைக்காக மூவரை பணிக்காக அழைத்து வந்த போது இந்த விபத்து நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் ராதாகிருஷ்ணன் குத்தாலிங்கம் ஆகிய இருவரது பெயர் மட்டும் தற்போது தெரியவந்துள்ளதாகவும் இறந்த மற்றொருவரின் பெயர் தெரியவில்லை எனவும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News