கீழையூர் தோட்டக்கலைத் துறையின் மூலம்
பழச்செடி தொகுப்பு மானிய விலையில் வழங்கும் நிகழ்ச்சி;
நாகை மாவட்டம் கீழையூர் தோட்டக்கலைத் துறையின் மூலம், விழுந்தமாவடி, காரப்பிடாகை தெற்கு மற்றும் கீழப்பிடாகை கிராமத்திற்கு, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 5 வகையான ரூ.200 மதிப்புள்ள பழச்செடி தொகுப்பு (மா, நெல்லி, கொய்யா, எலுமிச்சை, சீத்தா) ரூ.50-க்கு மானிய விலையில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநில விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைகுழு உறுப்பினர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், தோட்டக்கலைத் துறை அலுவலர் லோகநாதன், உதவி அலுவலர்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஒரு கிராமத்திற்கு 200 நபர்களுக்கு இத்தொகுப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நபர்களுக்கும், 5 செடிகள் வீதம் ஒரு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.