செய்தியாளரை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை போலீசார் விசாரணை
பள்ளிபாளையத்தில் செய்தியாளர் வீட்டில் கொள்ளையில் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை விசாரிக்கின்றனர்;
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதி தினகரன் பத்திரிக்கையின் செய்தி நிருபராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார் . இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் , பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தாஜ்நகர் ஸ்ரீ கார்டன் பகுதியில் அவருக்கு சொந்தமான தனி வீடு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ரமேசின் மகள் மனைவி உள்ளிட்டோர் திருப்பத்தூர் சென்று விட்ட நிலையில், வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வியாழன் அன்று ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டினில் மூவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மூவர் அவரை அருகில் இருந்த நாற்காலியில் கட்டிப்போட்டு விட்டு அவரை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த மூன்று பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.இதனை அடுத்து ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியே இருக்கும் வீட்டை குறி வைத்து இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், இதுகுறித்து ரமேஷ் கூறுகையில் வீட்டின் தூரத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் கண்காணித்து படி இருந்த நிலையில் இரண்டு வடமாநில இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் முகமூடி அணிந்திருந்ததால் அவர்கள் குறித்து அடையாளம் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவமானது பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.....குமாரபாளையத்தில் கடந்த வாரத்தில் மூன்று இடங்களில் தொடர் திருட்டுகள் நடைபெற்றது.. அதன் தொடர்ச்சியாக நான்காவதாக இங்கு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது ...