முன் அமர்வு லோக் அதாலத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்குகள்
ரூ.1.16 கோடிக்கு தீர்வு;
ஒரு வருடத்தின் ஒவ்வொரு காலண்டிற்கும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நிலையில், வருகிற மார்ச் 8- ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று தேர்வு மைய அலுவலகத்தில், நேற்று சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஏ.கந்தகுமார் தலைமையில், முன் அமர்வு லோக் அதாலத் நடைபெற்றது, இதில்,, நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ.1.15 கோடிக்கு தீர்வு காணப்பட்டது, முன் அமர்வு லோக் அதாலத், மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் என்.மணிவண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான மோகனப்பிரியா ஆகியோரின் அமர்வின் கீழ் நடைபெற்றது. முன் அமர்வு லோக் அதாலத்தில், தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஏ.கந்தகுமார் ஆணைகளை வழங்கினார்.