கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் நலச் சங்கம் சார்பாக சம்பள உயர்வு வழங்க கோரி தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்பட்டோர் பங்கேற்பு

கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் நலச் சங்கம் சார்பாக சம்பள உயர்வு வழங்க கோரி தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -30க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*;

Update: 2025-02-14 15:24 GMT
விருதுநகரில் கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் நலச் சங்கம் சார்பாக சம்பள உயர்வு வழங்க கோரி தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் -30க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் சூலக்கரை மேட்டில் மேட்டில் வைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் நலச்சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் பழனி முருகன் தலைமையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் 450 கிராம ஊராட்சியில் பணிபுரியும் OHT எஸ் டி ஆப்ரேட்டர்களுக்கு,மாதம் 4000 முதல் 4200 வரை மிக குறைவான சம்பளம் வழங்குவதாகும் ,இந்த சம்பளத்தால் எங்கள் குடும்பத்தை நடத்த முடியவில்லை யென்றும், ஆகையால் தங்களுக்கு மாதத்திற்கு 9000 முதல் இருந்து 10 ஆயிரம் வரை சம்பள உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட OHT ஆப்ரேட்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்ட முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News