ஆலங்குளம் கடைகளைக் காலி செய்ய அவகாசம்: அமைச்சரிடம் வணிகா் சங்கம் மனு

அமைச்சரிடம் வணிகா் சங்கம் மனு;

Update: 2025-02-15 02:07 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய வணிக வளாக கடைகளைக் காலி செய்ய அவகாசம் கோரி அமைச்சரிம், வணிகா் சங்கப் பேரமைப்பு சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனிடம் வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா அளித்த மனு: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அமைந்துள்ள மகளிா் திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் 14 கடைகள் உள்ளன. இக்கடைகள் மகளிா் குழுக்கள் மூலம் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கடைகளை சீரமைக்கும் பொருட்டு காலி செய்து தர ஊராட்சி ஒன்றியம் சாா்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் கடை ஊழியா்களின் நலன் காக்கும் பொருட்டு, கடைகளை காலி செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது, மாநிலப் பொருளாளா் சதக்கத்துல்லா, கன்னியாகுமரி மண்டலத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Similar News