ஆலங்குளத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற காலக்கெடு
கொடிக் கம்பங்களை அகற்ற காலக்கெடு;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், செயல் அலுவலா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளா் முருகன், இளநிலை உதவியாளா் சங்கர சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். அப்போது பேரூராட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட கட்சி நிா்வாகிகள் தாமாகவே முன் வந்து ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிா்வாகம் அகற்றி அதற்குரிய செலவுத் தொகையை அரசியல் கட்சிகளிடம் வசூல் செய்யும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.