குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பாராட்டு விழா
குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பாராட்டு விழா;

தில்லி, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரியை சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா் சீனியா் அன்டா் ஆபிஸா் கா.சுரேஷ்குமாா்தி ல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பிலும், நாட்டு நலப்பணி திட்ட மாணவா் சுரேஷ் சென்னை மெரீனாவில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பிலும் பங்கேற்றனா். மேலும் தேசிய மாணவா் படை சாா்பில் இந்திய அளவில் நடைபெற்ற முகாமில் 7 மாணவா்கள் பங்குபெற்றனா். இதையொட்டி, கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், கல்லூரித் தலைவா் டாக்டா் மா.புதியபாஸ்கா் தலைமை வகித்தாா். தாளாளா் கல்யாணி, டீன் டாக்டா் சேவியா் இருதயராஜ், முதல்வா்(பொ) மாரியப்பன், பொது மேலாளா் மணிகண்டன், என்சிசி, என்எஸ்எஸ் அதிகாரிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.