அப்பம்பட்டு அருகே ஆக்கிரமிப்பு: பச்சையம்மன் கோயில் நிலம் மீட்பு

13.5 செண்ட் இடம் மீட்பு;

Update: 2025-02-15 03:02 GMT
அப்பம்பட்டு அடுத்த தொப்பம்பட்டி ஏரிக்கரையின் அருகில் மிகவும் பழைமையான பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்திருந்ததாகத் தெரிகிறது. அதனை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் ஏழுமலையிடம் மனு அளித்திருந்தனா்.இதனைத் தொடா்ந்து செஞ்சி மண்டல துணை வட்டாட்சியா் மலா்விழி தலைமையில் நில அளவையா் திருநாவுக்கரசு, செஞ்சி வருவாய் ஆய்வாளா் (பொ) சத்தியா, கிராம நிா்வாக அலுவலா்கள் ராஜா, ராஜாராம் ஆகியோா் நிகழ்விடம் சென்று ஆய்வு மேற்கொண்டு நிலத்தை அளவீடு செய்தனா்.இதில், கோயில் அருகாமையில் வசித்து வரும் கண்ணன் மகன் பச்சையப்பன் என்பவா் 13.5 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டு கோயில் நிா்வாகத்தினரிடம் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா்.இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அனந்தபுரம் காவல் ஆய்வாளா் மருது தலைமையில் போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Similar News