அதிமுக அரசின் சாதனை விளக்க பிரசாரம்

அதிமுக அரசின் சாதனை விளக்க பிரசாரம் நடைபெற்றது.;

Update: 2025-02-15 06:28 GMT
அரியலூர், பிப். 15- அரியலூரில், அம்மா பேரவை சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து வெள்ளிக்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பிரசாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அதிமுக மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம்  எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். இந்நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை மாவட்டச் செயலர் ஓ.பி.சங்கர்,துணைச் செயலர் பிரேம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்  ஆ.இளவரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ப.இளவழகன், மாவட்ட பொருளாளர்  அன்பழகன்,  ஒன்றியச் செயலர்கள் பொய்யூர் பாலு, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்து, சாதனைகள் எடுத்துக் கூறினர். :

Similar News