உடல் நலக்குறைவால் இறந்த சுமைப்பணி தொழிலாளருக்கு
சிஐடி சார்பில் இறப்பு நிதி - எம்எல்ஏ வழங்கினார்;
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழவித்தியாபுரத்தை சேர்ந்தவர் கே.ராஜேந்திரன். இவர் சோழ வித்தியாபுரத்தில் உள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சுமைப் பணி தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். அவரது படத்திறப்பு விழா அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கீழ்வேளூர் எம்எல்ஏ வி.பி.நாகை மாலி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சிஐடியு சார்பில், சுமைப் பணி தொழிலாளர் சங்க நாகை மாவட்ட குழு சார்பில், இறப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி தலைமையில் நடைபெற்றது. கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை. மாலி, ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.தமிழரசன், மாவட்ட செயலாளர் டி.ஜெயராமன், மாவட்ட பொருளாளர் இ.ராஜேந்திரன், முன்னாள் சோழவித்தியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்செல்வம் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.