அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்
அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி தலைமையிலும் கழக மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி அவர்கள் முன்னிலையிலும் அதிமுக ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை சங்கரன்கோவில் நகர் முழுவதும் பொது மக்களுக்கு விநியோகித்தனர். சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் தொடங்கி சங்கரன்கோவில் நகர் முழுவதும் அதிமுக ஆட்சியின் பொதுமக்கள் நலன் சார்ந்து செய்யப்பட்ட நலத்திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கி அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை வீதி வீதியாக விநியோகித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு பணி நிர்வாகிகள் என ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்