ராமநாதபுரம் தோழர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவரை பணி நீக்கம் செய்ய வேண்டும், புதிய பாம்பன் பாலத்தை மார்ச்முதல்வாரத்தில் திறக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படும் என சண்முகம் செய்தியாளர்சந்திப்பில் கூறினார்;
ராமநாதபுரம்ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவரை பணி நீக்கம் செய்ய வேண்டும், புதிய பாம்பன் பாலத்தை மார்ச்முதல்வாரத்தில் திறக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ராமநாதபுரத்தில் பேட்டி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்திற்கு வந்த மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சமீபத்தில் பாளையங்கோட்டையில் குழந்தை இறப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியான மருத்துவ கட்டமைப்பு இல்லை என கூறிய நிலையில், தமிழக முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாக துவங்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் மருத்துவமனையில் காலி பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். குழந்தை இறப்பில் தவறு இருந்தால் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டி ஐந்து ஆண்டுகள் ஆகியும் போதிய நிதி ஒதுக்காமல் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை.. இதற்கு அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தி விரைவில் மருத்துவமனையை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார். பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாத காலங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது. அதிகாரிகள் பலமுறை ஆய்வுகள் நடத்தியும் தற்போது தான் மார்ச் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் இறுதியாக திறக்கப்படவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்தார். தமிழக முழுவதும் பருவம் தவறிய மழையால் பல லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.. இருந்த போதும் தமிழக அரசு எந்த ஒரு நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை... மத்திய அரசும் பயிர் காப்பீட்டுக்கான நிதி இன்னும் தரவில்லை, மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் மாநில அரசு சொந்த நிதியில் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.. மானாமதுரை மேல கிடாவூர் கிராமத்தில் பட்டியல் இன இளைஞரின் கைகள் சாதி வெறியர்களால் வெட்டப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது தமிழகத்திற்கு இழுக்கு எனவும் அவர் தெரிவித்தார். உரிய காலத்தில் இது போன்ற வழக்குகளை விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல. திமுக 2021 இல் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் படிப்படியாக மதுபான கடைகளை மூட வேண்டும்... பள்ளிகள் கோயில்கள் முன்பு உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டும் என போராடி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.மேலும்தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் சகித்துக் கொள்ள முடியாது. ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். கல்வி நிலையங்களில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்களில் கவனம் செலுத்தி கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் புதிதாக துவங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கியது பாஜக அரசு உள்நோக்கத்தோடு பிரதி பலனை எதிர்பார்த்து வழங்கப்பட்டது போல் தெரிகிறது. அதிமுக தற்போது ஐந்து ஆறு அணிகளாக உள்ள நிலையில் 2026 தேர்தலுக்குள் மேலும் உடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது தமிழக அரசு அமைத்துள்ள குழுவை கலைத்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும். மீனவர்களின் கைது பிரச்சனையை அண்டை நாட்டு பிரச்சனை. இதனை மத்திய அரசுதான் கையில் எடுத்து இருநாட்டு பிரதிநிதிகளிடம் பேசி சுமுகமான உடன்பாடு எட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.. ராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் குருவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்