சிவகாசி -தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம்! ஆளுங்கட்சியாக இருந்தாலும்- எதிர்க்கட்சியாக இருந்தாலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் இணைந் திருப்போம்!! அமைச்சர்கள்

சிவகாசி -தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம்! ஆளுங்கட்சியாக இருந்தாலும்- எதிர்க்கட்சியாக இருந்தாலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் இணைந் திருப்போம்!! அமைச்சர்கள் உறுதி......;

Update: 2025-02-15 14:55 GMT
சிவகாசி -தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம்! ஆளுங்கட்சியாக இருந்தாலும்- எதிர்க்கட்சியாக இருந்தாலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் இணைந் திருப்போம்!! அமைச்சர்கள் உறுதி...... சிவகாசியில் தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக நூறாண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் தீப்பெட்டி தொழிலுக்கு வித்திட்ட காகா சண்முக நாடாரையும், அய்ய நாடாரையும் நினைவுகூர்ந்து, மறைந்த இருவரின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க, அமைச்சர்கள் இருவரும் பேசும் போது :- எண்ணற்ற குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரமாக நம்பியுள்ள தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருப்பதாகவும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் வளர்ச்சி பெற்றுள்ள தீப்பெட்டி தயாரிப்பாளர்களுடன் இணைந் திருப்போம். தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்த அனைத்தும் பரிசீலனையில் உள்ளது. விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.தீப்பெட்டி தொழிலுக்கு உதவி செய்ய தமிழக அரசு எப்பொழுதும் தயாராக உள்ள தென்றும் பேசினர். அதனை தொடர்ந்து அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விஜய்ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது :- தீப்பெட்டிக்கு எதிரான லைட்டர்களுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்த தமிழக முதல்வருக்கும், குறைந்த விலை லைட்டர்களுக்கு தடை விதித்த ஒன்றிய அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அதே சமயத்தில் தீப்பெட்டி உற்பத்தி செய்யத் தேவையான குளோரைடு என்ற முக்கிய பொருளை ஒரு மாவட்டத்திலி ருந்து வேறொரு மாவட்டத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வதி லுள்ள அனுமதி பெறும் நடைமுறைகளை அரசு எளிமையாக்க வேண்டும். சட்டவிரோதமாக சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டர்களுக்கும், உதிரி பாகங்களுக்கும் முற்றிலும் ஒன்றிய அரசு தடை விதித்தால் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், தீப்பெட்டி தொழிலும், அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்றார். பேட்டி:- விஜய் ஆனந்த்- தலைவர், அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம்.

Similar News