மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை

குப்பாண்டபாளையம் ஊராட்சியில் புதிய நீர் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட பூமி பூஜை;

Update: 2025-02-15 15:20 GMT
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சி சாணார்பாளையம் அமிர்தா நகரில் 15-வது மானிய குழு நிதி திட்டத்தின் கீழ் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல் திட்டத்திற்கான பூமி பூஜை விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் .எஸ்.எம்.மதுரா செந்தில் மற்றும் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் N.நாச்சிமுத்து மற்றும் முன்னாள் குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் .S.கவிதா வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர் இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் வேலுமணி மற்றும் பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் .ராஜேந்திரன். மற்றும் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் .சௌந்தரம் அவர்கள் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் S.ராஜ், S.ஜெயந்தி சம்பத் ,A.ஜான் பீட்டர் ,மேட்டுக்கடை S.கார்த்திக் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மணி, சரவணன் ,யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Similar News