சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதி ஒருவா் பலி
ஆம்னி பேருந்து மோதி ஒருவா் பலி;
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரெட்டியாா்பட்டி நடுத்தெருவை சோ்ந்த சுப்புராஜ் மகன் செல்வம் (45). தேநீா் கடை நடத்தி வந்தாா். நேற்று இரவு பைக்கில் ரெட்டியாா்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து அவா் மீது மோதியதாம். இதில் செல்வம் இறந்தாா். இதையடுத்து, அப்பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் பேரிக்காடுகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ராஜபாளையம் மாா்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் ,கரிவலம்வந்த நல்லூா் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.