தவசிமேடையில் புனித அந்தோணியார் ஆலய ஜல்லிக்கட்டு விழா
நத்தத்தில் தவசிமேடையில் புனித அந்தோணியார் ஆலய ஜல்லிக்கட்டு விழா;
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமேடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு காலை 8.30 மணி முதல் ஜல்லிக்கட்டு விழா துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மொத்தம் 725 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்கச்செயின், எல்இடி டிவி, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் 20 மாடு பிடி வீரர்கள் களம் இரக்கப்படுவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் கோட்டாட்சியர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தார்.