திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு உற்சாக வரவேற்பு
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பேரணியாக வந்தபோது மேளதாளங்கள் முழங்க சூறை தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்;
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பேரணியாக வந்தபோது மேளதாளங்கள் முழங்க சூறை தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்களுக்கு பட்டாசு வெடிப்பு சூரை தேங்காய் உடைத்தும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர் தூவி கட்சியினர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அண்ணா பெரியார் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர் இதில் திமுக நகரச் செயலாளர் ரவிக்குமார் நகர இளைஞர் அணி அமைப்பாளர் தீபன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அவரை வரவேற்க கட்சியினர் காரில் திரண்டு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது