கொடைக்கானல் கீழ் மழை வனப்பகுதியில் காட்டுத்தீ
கொடைக்கானல் கீழ் மழை வனப்பகுதியில் காட்டுத்தீ;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடும் வெயிலும், இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடிகள், புல்கள் ஆகியவை காய்ந்த நிலையில் உள்ளன. இந்நிலையில் கீழ் மழை பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியம் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் காட்டெருமை, மான், முயல், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் இடம் பெயர வாய்ப்புள்ளதால் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.