சங்கரன்கோவிலில் வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு மீட்பு
வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு மீட்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சண்முகா நகரில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் நல்ல பாம்பு இன்று பதுங்கி இருந்தது. இதை கண்ட அப்பகுதி பொது மக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பதுங்கி இருந்து நல்ல பாம்பை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினார்.