கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை விழும் அபாயம்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்;
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சியில் அமைந்துள்ள (தெற்கு) கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.இந்நிலையில் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு முறையான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகத்தை கட்டிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.