மகாகவி பாரதியார் நூற்றாண்டு அறக்கட்டளை விழா சொற்பொழிவு

சொற்பொழிவு;

Update: 2025-02-17 02:16 GMT
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு அறக்கட்டளை விழா சொற்பொழிவு இலக்கியத்துறை சார்பில் நடைபெற்றது.  தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொ) ஆட்சிக்குழு உறுப்பினர் சி.அமுதா தலைமை வகித்தார். இலக்கியத்துறை தலைவர், பேராசிரியர் ஜெ.தேவி வரவேற்றார்.  இலக்கியத்துறை உதவிப்பேராசிரியர் இரா.தனலெட்சுமி உரையாற்றினார்.   தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ)  கோ.பன்னீர்செல்வம், மொழிப்புல முதன்மையர்  ச.கவிதா  வாழ்த்திப் பேசினார்.  சிறப்பு விருந்தினராக திருவாடனை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் மு.பழனியப்பன் கலந்து கொண்டு “ஞாலவெளி ஒரு ஞானவொளி” என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.  நிறைவாக, இலக்கியத்துறை மாணவி முனைவர் பட்ட ஆய்வாளர் சு.மாசிலாமணி நன்றி கூறினார்.

Similar News