மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி சைபர் கிரைம் போலீசாரால் தயாரிக்கப்பட்ட குறும்படத்தை தேனி மாவட்ட எஸ்.பி வெளியிட்டார்

விழிப்புணர்வு;

Update: 2025-02-17 11:25 GMT
சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி சைபர் கிரைம் போலீசாரால் தயாரிக்கப்பட்ட குறும்படத்தை தேனி மாவட்ட எஸ்.பி வெளியிட்டார் வட இந்தியர்களை வைத்து வெளிநாடுகளில் இருந்து சைபர் குற்றங்களில் ஈடுபடுவதால் அவர்களை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக எஸ்.பி பேட்டி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் உருவாக்கப்பட்ட குறும் படம் இன்று வெளியிடப்பட்டது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் சிந்தித்து செயலாற்று என்ற தலைப்பில் குறும் படத்தினை வெளியிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் சைபர் கிரைம் குற்றங்களால் அதிக மக்கள் பாதிப்படைகின்றனர் டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன அதில் இருந்து பொதுமக்கள் எப்படி எந்த பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தேனி சைபர் கிரைம் போலீசாரால் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்தார் பொதுமக்களின் ஆதார் ஆன் உள்ளிட்டவை குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி குற்ற செயலில் ஈடுபடுவதாகவும் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு 30க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது மூன்று கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார் வட நாட்டு இந்தியர்கள் தான் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவிலிருந்து சில நபர்களை பணம் கொடுத்து வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சைபர் குற்றங்களில் ஈடுபடுவதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தார்

Similar News