கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் வைத்துள்ள சம்பளத்தினை வழங்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த வேலை ஆட்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் வைத்துள்ள சம்பளத்தினை வழங்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த வேலை ஆட்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் வைத்துள்ள சம்பளத்தினை வழங்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த வேலை ஆட்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,வருடத்திற்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும்.பேரூராட்சிகளுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதியே குறைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் முத்தாலம்மன் பஜார் பகுதியில் இருந்து வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்களது கோரிக்கைகளை வைத்து மனு அளித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.