ராமநாதபுரம்காவல்கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 4800 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதால் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு;
ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தது வீடுகளில் கதவுகளை உடைத்து கொள்ளை அடிப்பது வாகனங்களை திருடுவது கார் பைக்குகளில் மர்ம நபர்கள் ஆயுதங்கள் கொண்டு வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்தது பொதுமக்கள் மத்தியில் புகார்கள் வரப்பெற்றதின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஸ் அதிரடி நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை ஆர்எஸ் மங்கலம் பரமக்குடி திருப்புல்லாணி மண்டபம் ராமநாதபுரம் வாலாந்தரவை உச்சிப்புளி , ரகுநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4800 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் கூறுகையில். ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் குற்ற சம்பவங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சுமார் 4800க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது ஆங்காங்கே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர் இதனால் பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று வீடியோ பதிவு செய்யப்படுவதால் உண்மை குற்றவாளிகள் உரிய நேரத்தில் கைது செய்ய வாய்ப்பாக உள்ளது ராமநாதபுரம் நகர் பகுதிகளில் முழுமையாக கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது இங்கு நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது பொதுமக்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களது இல்லங்களிலும் அலுவலகங்களிலும் அவசியம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் சந்தேகப்படும்படி யாரேனும் நபர்கள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் வெளியூர் செல்லும் பொழுது காவல் நிலையத்தில் தகவல் தெரியப்படுத்த வேண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் ஆகையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை சாலைகளில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் சமீபகாலமாக குற்ற சம்பவங்களை ஈடுபடுபவர்கள் உடனடியாக கண்காணிக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதால் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்தார்