தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ராமச்சந்திரன்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ராமச்சந்திரன்;

Update: 2025-02-17 12:14 GMT
தென்காசி மாவட்டம், தென்காசி இ. சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கூடுதல் கட்டிடங்கள், பொது சுகாதார அலகு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.

Similar News