மருதூரில் இலவச பொது மருத்துவ முகாம்
200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை;
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மருதூரில், மருதூர் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மருதூர் கிளை அமைப்பு, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய, இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, அகில இந்திய முன்னாள் ராணுவத்தினர் நல சங்க தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். வணிகர் சங்க செயலாளர் இலக்குவன் வரவேற்றார். முகாமில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, ரத்த அழுத்தம், இசிஜி, இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவர் குருநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். நிகழ்ச்சியில், மருதூர் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த பஞ்சாபிகேசன், சித.கருணாநிதி, அமிர்தலிங்கம், அண்ணாதுரை , கண்ணன், பிரின்ஸ் கோபால்ராஜா, ஆறுமுகம், சண்முகம், சரவணன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.