முழுதும் சேதமான பஸ் ஸ்டாண்ட் கழிப்பிட கதவுகள்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கழிப்பிட கதவுகள் முழுவதும் சேதமான நிலையில் இருப்பதால் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2025-02-17 14:41 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இங்கு பயணிகள், பஸ் ஸ்டாண்ட் கடையினர், டெம்போ, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் என பெரும்பாலோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள கதவுகளில் தாழ்ப்பாள் இல்லாமலும், பாதி உடைத்து, பேப்பர் போட்டு ஒட்டி வைத்த நிலையிலும் உள்ளது. இங்கு  பொதுமக்கள் சங்கடத்துடன் சென்று  வருகின்றனர். இதனை சீர்படுத்த பொதுமக்கள் பலமுறை சொல்லியும் பலனில்லை. சேதமான கதவுகள் உள்ள இந்த இடத்தில் பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உடனே இங்குள்ள கதவுகளை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News